பணிக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் ஹெச்.ஆர் துறையில் சிலரிடம் பேசியபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.' உங்கள் பெயர் சதாம் உசேன் என்று இருப்பதால் பணிக்கு எடுப்பதில் சிரமம் இருக்கிறது' என்று பதில் கிடைத்தது. தனது பெயரை நினைத்து முதன்முறையாக நொந்துபோனார் அவர். இப்படி ஒன்றிரண்டு இடங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 40 இடங்களில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.