அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் தலையாய பணியாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல், தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், ஊழல் வழக்குகள் என நான்கு முனைத் தாக்குதலில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது, அண்ணா தி.மு.க. இந்நிலையில், மார்ச் 11 உ.பி தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிரடிகளைக் காட்டத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க.