நேற்று இரவு 9 மணி முதல், சென்னையின் முக்கியப் பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், ராயப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, போட்ஸ் கிளப், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய இடங்களில்... நள்ளிரவில் நீண்ட நேரமாக மின்சாரம் தடைபட்டு இருப்பதாலும், கோடைகாலம் என்பதாலும் பொதுமக்கள் பெரும் அவதிபட்டுவருகின்றனர்