ஒருவரின் நோய், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் வெளியிடக்கூடாது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் என்றதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த முழுவிவரங்களை லண்டன் டாக்டர் ரிச்சர்டு பெய்ல் மற்றும் மருத்துவக்குழு மூலம் பேட்டி கொடுத்து விட்டோம். இதன்பிறகும் அவரது மரணத்தில் சந்தேகம் என்று குற்றம் சுமத்துபவர்கள்தான் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம்" என்றனர்.