***சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம்***
"சசிகலாவை ஒதுக்கிவைத்துவிட்டால், 'மொத்த அ.தி.மு.க-வும் நம் பக்கம் வந்துவிடும்' என்பதை அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்திவருகிறார் பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசிவருகின்றனர். அவர்களிடம் பேசும்போது, 'சசிகலா தலைமையின்கீழ் இருந்தால், மக்கள் மத்தியில் நீங்கள் அவரைப் புகழ்ந்து பேச முடியாது. ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்தான் தினகரன். கட்சிக்குள் நீங்கள் இருந்தாலும், பொதுவெளியில் இவர்கள் இருவரையும் உங்களால் ஆதரிக்க முடியுமா? கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், 'சின்னம்மா' என்று விளித்துப் பேசுவதற்குப் பின்னணியில் அவர்களுக்கான தேவை இருக்கிறது. எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும், சசிகலா தலைமையின்கீழ் உங்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது.