சசியை சந்திக்காத முதல்வர் : முக்கிய காரணம் !

2020-11-06 0

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் நிகழ்ந்த களேபரங்களால் கலக்கத்தில் இருந்தனர் கட்சியினர். ஒருவழியாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராகிவிட்டார். அதே நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது, தமிழகத்தில் கண்ணீர்க் காவியத்தை அரங்கேற்றிய அ.தி.மு.க.வினர், சசிகலாவுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தவில்லை. மேலும், பெங்களூரிலேயே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் அனைத்து அமைச்சர்களும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், மகளிரணியினரும் ஜெயலலிதாவுக்காக முகாமிட்டனர். ஆனால் சசிகலா சிறையிலிருக்கும் இந்தச் சமயத்தில், விரல்விட்டு எண்ணும் வகையில் அமைச்சர்களும், மகளிரணியினரும் சென்றுள்ளனர். இதுதான், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் உள்ள வித்தியாசம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்கள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர். அதில், எம்.பி.க்கள் மீது மட்டும் சசிகலா நடவடிக்கை எடுக்கவில்லை. சசிகலாவை நாங்கள் நீக்கிவிட்டோம் என்று பதிலடிகொடுத்தது, பன்னீர்செல்வம் தரப்பு. தற்போது, மக்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் பன்னீர்செல்வம். மறுபக்கம், ஆட்சியில் அமர்ந்து அரசாங்கத்தை நடத்தத் தொடங்கிவிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையிலான அமைச்சரவையும் செயல்படத் தொடங்கிவிட்டது.

Videos similaires