இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இறந்ததாகச் சொல்லப்படும் நபருக்கு புல்லட் காயம் எப்படி வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இந்திய அதிகாரிகளிடம் தொடர்பில்தான் இருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களையே குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. எங்கள் படகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தவோ, வேறு விஷயங்களுக்கோ எங்களுக்கு அரசு அனுமதி இல்லை. சொல்லப் போனால், எங்கள் படகில் துப்பாக்கிகளே கிடையாது. இந்திய மீடியாக்களில்தான் இதுபோன்ற தவறான செய்திகள் வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை, சுடுவதற்கு அதிகாரம் இல்லை. அவர்களைக் கைது செய்து, படகுகளை சீஸ் பண்ணுவது மட்டும்தான் எங்கள் வேலை. அதுவும் பார்டரை க்ராஸ் செய்தால் மட்டும்தான்!" என்று சொல்லியிருக்கிறார் வாலகுளுகே.