தோனி தலைமையில் தான் இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பைகளை ஜெயித்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்புமிக்க தோனியை எந்த அடிப்படையில் கேப்டன் பதவியில் இருந்து புனே நிர்வாகம் நீக்கியுள்ளது என தொடந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தான் அணியின் எதிர்காலம் கருதி இம்முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் புனே அணியின் உரிமையாளர்.