சசிக்கு பெஸ்ட் சிறை எது? நடக்கும் போட்டி

2020-11-06 0

"சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் கடந்த 15-ம் தேதி முதல் சிறையில் உள்ளனர். சிறையில் அவருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் சில வசதிகளைக் கேட்டு மனு அளித்தார் சசிகலா.

தற்போது கட்டில், மின்விசிறி, செய்தித்தாள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது சிறைத்துறை. நேற்று தினகரனுடன் நடந்த சந்திப்பில், பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதித்தார். இதற்காக, 'கர்நாடக உள்துறை அமைச்சகத்திற்கு எந்த வகையில் வேண்டுகோள் வைப்பது?' என்பதுதான் சந்திப்பின் சாராம்சமாக இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுசெய்வது குறித்தும் விளக்கினார் தினகரன். தலைமைச் செயலக நடவடிக்கைகள், பன்னீர்செல்வம் அணியின் தோல்வி, சட்டசபைக் காட்சிகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்தெல்லாம் நீண்ட நேரம் விளக்கிக்கொண்டிருந்தார் தினகரன். அனைத்தையும் கேட்டுக்கொண்டவர், 'புழல் சிறைக்கு மாற்றுவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்' என்பதையே வலியுறுத்தினார் சசிகலா" என்றார்.

Videos similaires