"மங்களா ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தக் காலகட்டத்தில், இந்த ஏரியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல வரத்து வாய்க்கால்கள் சரியாக இருந்ததால், மழைநீர் ஏரியில் கலந்ததால், வற்றாத ஏரியாக இருந்துள்ளது. இருபோகம் விவசாயம்செய்து, எங்கள் பகுதி செழுமையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது.