நேரம் பார்க்காமல் உழைத்தால்.. வாழ்க்கையில் உயர்வு நிச்சயம்!

2020-11-06 1

Reporter - நா.ராஜமுருகன், துரை.வேம்பையன்

`டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை முடிச்சுட்டு, சாயங்காலம் ஆறரை மணிக்கு வீட்டுக்கு வருவேன். அதில் இருந்து இரவு ஒரு மணிவரை, தொழிலை கவனிப்பேன்."

கொரோனா ஊரடங்கு காலம் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமான பாடம், `ஒரே வேலையை, ஒரு வருமானத்தை நம்பியிருக்கக்கூடாது' என்பதுதான். காரணம், ஊரடங்கினால் பலருக்கும் தாங்கள் பார்த்து வந்த வேலை பறிபோக, இந்தப் பேரிடர் காலத்தில் பலரும் மாற்று வருமானத்துக்கு வழியில்லாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கரூரைச் சேர்ந்த சுபாஷ், அலுவலக வேலை, ஓய்வு நேரத்தில் சொந்தத் தொழில் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார். அவரைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் அவர்.

Videos similaires