``மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். வெடிவிபத்து ஏற்பட்டபோது நாங்கள் அறையில் இருந்தோம். எங்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை."
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த மிகவும் பயங்கரமான வெடிவிபத்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வெளியாகும் புகைப்படங்கள் பலவும் கவலையை அளிக்கும் விதமாக உள்ளன. இந்த நிலையில் தற்போது பெய்ரூட் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கும் புகைப்படம் பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.
#StaySafe | #COVID19India #lebanon #lebanonblast