ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் தேசிய அளவில் ஒரு பதற்றம் தொற்றியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருந்து வருகின்றன. காஷ்மீர் இந்தியாவோடு இணைய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் இந்தியாவின் அப்போதைய பிரதமர் நேரு. இந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் அப்போது நேரு செய்ததும் நடந்ததும் என்ன? என்பது குறித்த ஃப்ளாஷ்பேக் ஒன்றை தெரிந்துகொள்வோம்.