உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். இவ்வளவு கம்பீரமான பெண் ஆளுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் மூன்றாவது அணி இவரை பிரதமாராக்கிப் பார்க்க ஆசைப்பட்டது. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் அல்டிமேட் ஆளுமை முகம்.
jayalalithaa and her political journey