தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை என்ற வருத்தம் இவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகத் தொண்டர்கள் புடைசூழ சட்டப்பேரவைக்குத் தினகரன் வருகை தந்தது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கும் அமைச்சர்களுக்கும் எரிச்சலூட்டியது என்கிறது கட்சி வட்டாரம்.
dinakaran team teased sellur raju.