'நீதிக்குத் தலைவணங்கு' படத்தில் படோடோபமாக பொறுப்பின்றி வாழும் தன் மகன் எம்.ஜி.ஆரை அவரது தந்தை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார். வெளியே சென்று அவர் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து சாதாரண மனிதர்களின் துயரங்களை புரிந்துகொள்வார். 'தம்பிக்கு எந்த ஊரு' படத்திலும் பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ரஜினி பொறுப்பின்றி சுற்றித்திரிவதைக் கண்டிக்கும் அவரது தந்தை ஒருகட்டத்தில், “சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டு” என சவாலாகச் சொல்லி வீட்டை விட்டு மகன் ரஜினியை துரத்திவிடுவார். சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்திலும் தன் தாயின் உடல்நோயை தீர்க்க பரிகாரமாக குறிப்பிட்ட நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்வார் பணக்கார வீட்டுப்பிள்ளையான விஜய் ஆண்டனி.