ஊர்காவல்படை வீரரின் இன்றைய பரிதாப நிலை !

2020-11-06 0

‘எனக்கு சம்பளம் 150 ரூபாய்தான் சார், படிக்கிற பசங்க போராடுவதைப் பார்த்து 500 ரூபாய்க்கு பாய் வாங்கிக்கொடுத்தேன். ஆர்வத்தில் பேசினேன்’ என அனைத்தையும் சொன்னேன். இதையடுத்து எனக்கு டியுட்டி போடவே இல்லை. அதனால் சில நாட்கள் கழித்து, திருச்சி போலீஸ் கமிஷனரை நேரில் பார்த்து, 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஆர்வத்தில் பேசிவிட்டேன். அதனால் பணி வழங்காமல் இருக்கிறார்கள்' என முறையிட்டேன். அப்போது கமிஷனர், 'உன்னை யார் இப்படி பேச சொன்னா? உன்னை அரஸ்ட் பண்ணாமல் விட்டாங்கன்னு சந்தோசப்படு. அங்கே என்ன பேசினீர்கள் என்று எழுதிக் கொடுத்துட்டுப் போங்க' என்றார். அப்படியே விளக்கக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனாலும் வேலை கொடுக்கவில்லை. அடுத்து கலெக்டர், அமைச்சர் எனப் பலரிடமும் இதுகுறித்து மனுக்கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.