அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, வேறு வகையானப் போராட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணிய பகத்சிங், மார்க்சீசியக் கொள்கைகளோடும் கம்யூனிசக் கொள்கைகளோடும் மீசையை முறுக்கி களத்தில் நின்றார். 1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகர்களாக உருவெடுத்து உயர்ந்து நின்றார்.