விவசாயிகளின் நம்பிக்கையான நண்பன் என்றே மிளகாயைச் சொல்லலாம். பயிர் செய்யும் விவசாயிகளைக் கைவிடாது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், மருவத்தூர், பேரளி, மூங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் ஒருகாலத்தில் மிளகாய் சாகுபடி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் நாட்டுமிளகாய், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த நாட்டு மிளகாய் சாகுபடி காலப்போக்கில் படிப்படியாகக் கைவிடப்பட்டது. நாட்டு மிளகாய் சாகுபடியைக் காண்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில் ஒதியம் கிராமத்தில் இயற்கை முறையில் நாட்டு மிளகாய் சாகுபடி செய்து வருகிறார் இளம் விவசாயி ராஜா ராஜேந்திரன்.
Producer - K.Ramakrishnan
Video - M.Aravind
Edit & Executive Producer - Durai.Nagarajan