லாக்டவுன் இல்லா ஞாயிற்று கிழமை.. காசிமேட்டில் களை கட்டிய மீன் வியாபாரம் - வீடியோ

2020-09-06 1,861

சென்னை காசிமேட்டில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டிருந்ததாலும், அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு இருந்ததால் காசிமேடு மீன்சந்தை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.

இதனால் வழக்கமாக சந்தை போடும் பகுதியில் இல்லாமல் சாலை ஓரங்களில் வியாபாரிகள் மட்டும் மீன்வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளிலே மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதிய நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு இல்லை என அரசு தளர்வுகள் அளித்த நிலையில் முழு ஊரடங்கு இல்லாத ஞாயிற்றுகிழமை என்பதால் காசிமேட்டில் மீன்சந்தை 5 மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்டது. இதனால் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் காசிமேடு மீன்சந்தைக்கு படையெடுத்தனர்.

கொரோனா பரவல் இருந்தபோதும் காசிமேடு மீன்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்ததால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.

People crowded fish Shops ahead Sunday Unlock

Free Traffic Exchange

Videos similaires