விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 12 தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் 6 தேதி பாஜகவினர் என்.எல்.சி சுரங்க நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுக்க எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது யார் உடனே அதை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நெய்வேலி இரண்டாவது சுரங்கம் முன்பு ரசிகர்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள். இரண்டு நாட்கள் காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். இந்தநிலையில், இன்று மீண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுரங்கம் முன்பு குவிந்தனர். படப்பிடிப்பு இன்று நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த விஜய், வேன் மீது ஏறி தனது ரசிகர்களைக் கண்டு கையசைத்து பின்னர் ரசிகர் கூட்டத்துடன் செல்பி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய்யைக் காண 6 வயது முதல் 60 வயது வரை அனைவருமே பார்க்க வந்திருந்தனர்.