சந்திரனுக்கு சாட்லைட் அனுப்பிய நம் நாடு,
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். இதில் இந்தியா 30.3 மதிப்பெண் பெற்று 102வது இடத்தை பிடித்துள்ளது
நம்மை சுற்றி இருக்கும் பிற நாடுகளான பாகிஸ்தான் 94 இடத்திலும், பங்களாதேஷ் 88 இடத்திலும், நேபால் 73 வது இடத்திலும், இலங்கை 66 ஆவது இடத்திலும் முன்னேறிய நிலையில் காணப்படுகின்றன.
மேலும், தென் ஆப்பிரிக்கா 59 வது இடத்திலும், பிரேசில் 18 ஆம் இடத்திலும், ரஷ்யா 22ஆம் இடத்திலும் உள்ளன.
வருடா வருடம் இந்த பட்டியலில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
2015ஆம் ஆண்டில் 93 இடத்தில் இருந்த இந்தியா தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது.
2014ஆம் வருடம் 77 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 55 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் 39 சதவீத வீடுகளுக்கு சுகாதாரமற்ற நிலையில் இருப்பது அறியப்பட்டுள்ளது.
இப்பொழுதும் திறந்தவெளியில் கழிப்பிடங்கள் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.
ஒருபுறம் சந்திராயன் மற்றொருபுறம் பசியும் பட்டினியும் வளர்ந்து வருகிறது.
ஏற்கனவே 100க்கு 34 குழந்தைகள் தாயின் கர்ப்பப் பையிலேயே இறந்து போகிறது. 9 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதிலேயே வயதுக்குள்ளேயே ஆரோக்கிய குறைபாடால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 19 கோடிப்பேர் இரவு பசியுடன் படுக்கைக்கு செல்கிறார்கள். தற்போது ஆய்வு முடிவு மோசமாக வந்திருப்பது மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதாக இருக்கிறது.
விவசாயிகளிடமிருந்து அரிசி கொள்முதல் செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டம் மூலம் பொது மக்களுக்கு உணவு கொடுப்பதே மேலும் விரிவு படுத்துவது அத்யாவசியமாகிறது. ஆனால், அதை மையப்படுத்தி ஒற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று பயனாளிகளை சுருக்குவது ஆபத்தாக முடியும்.
We offer free video with a variety of video marketing strategies to help you take your career path.