உலகின் நுரையிரலாக விளங்கும் அமேசான் காட்டுகளில் சமீப காலமாக அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த காட்டுத் தீ சம்பவத்திற்கு மக்களின் செயல்களே காரணம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகளில் பெரும் அளவில் ஏரியும் காட்டு தீ விபத்து சம்பவத்திற்கு, மக்கள் காட்டு பகுதியில் தங்களின் பயன்பாட்டிற்காக வைக்கும் தீயே பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது.
பொதுவாக இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான். எனினும் தற்போது மக்களின் செயல்பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்களின் நில தேவைக்காக அமேசான் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.