ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸார் மோடி புகைப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ

2019-08-23 846

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்க்கு முறைகேடாக பணம் பறிமாற்றத்திற்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் அவரின் வீட்டு சுவர் ஏறி குதித்து கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர் தலைமையில் முன்னால் மாவட்ட தலைவர் ஜொரோம் ஆரோக்கியராஜ் முன்னால் மேயர் சுஜாதா உட்பட 100க்கு மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் அப்போது ப.சிதம்பரத்தை பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் மோடியின் உருவ படத்தை எரித்தும் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

des : Congress leader Bharatiya Janata Party (BJP) leader P Chidambaram arrested

Videos similaires