திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமத்தில் இருந்து அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக குமரலிங்கத்திற்கு பைப்லைன் மூலமாக குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் குழாயானது அழுத்ததின் காரணமாக உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகின்றது. ஆற்றுப்பாலத்தின் மேல் குடிநீர் குழாய் உடைந்து ஆற்றுக்குள் ஆகாய கங்கை போல் கொட்டுகிறது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அருவிபோல் கொட்டும் தண்ணீரில் குளித்து பலர் மகிழ்கின்றனர்.இதேபோல் பாலத்தின் மேற்பரப்பில் கசியும் தண்ணீரானது தேங்கி நிற்கிறது இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பொதுமக்கள் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை அதற்குப் பதிலாக சாக்குப்பையினை சுற்றியுள்ளனர்.பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் சூழ்நிலைகளில் இங்கு உடைந்துள்ள குழாயை சரி செய்யாமல் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
Drinking water pipe breaks into the Kolumum Amravati River near Udumalai
#Udumalai
#Amravati
#Kolumum
#Trippur