புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ

2019-07-27 4

புதுச்சேரி சாதிய மதவாத ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாதிய மதவாத ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு சிறப்பு அவசர சட்டத்தினை இயற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆணவ படுகொலைக்கு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டத்திமை மத்திய அரசு இயற்ற கோரியும் சாதிய ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும் நிதி உதவியும் மாநில அரசுகள் வழங்க கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆணவ படுகொலைகள் அதிகரித்து இருப்பதாகவும், மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து தலித் சிறுபான்மை மக்களை குறி வைத்து தாக்கும் அரசாக மத்திய அரசு செயல்படுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

des : Puducherry Freedom Leopard Demonstration in Puducherry

Videos similaires