தஞ்சை ரயிலடியில் ஏஐடியுசி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாபெரும் பறை அடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார் முன்னிலை மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தில் சேவை தொழில் புரியும் ஆட்டோ தொழிலை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும், தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் சுய தொழில் புரியும் ஆட்டோ தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களான ஓலா, உபேர் போன்றவைகளை அனுமதிக்காதே, தினமும் உயரும் பெட்ரோல் டிசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி பறையடித்தபடி கோசமிட்டனர் இதற்கான ஏற்பாடுகளை அன்பழகம், துரை.மதிவாணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
des : Massive drunken demonstration on behalf of AITUC