பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த மன்னராட்சியை மக்கள் புரட்சி மூலம் 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு மக்களாட்சி நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரான்சு நாட்டில் மக்களாட்சி நிறுவப்பட்டு 230 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைத்துள்ள பிரன்ச் போர் நினைவிடத்தில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் தூதர் கேத்ரின், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின் போது இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, இருநாட்டு தேசிய கீதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பிரென்ச் குடியுரிமை பெற்றோர், அரசு அதிகாரிகள் உட்பட பலர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
des : * In honor of the National Day of France, District Collector and French Ambassador at the French War Memorial