காரைக்கால் அம்மையார் ஆலயம் - மாங்கனி திருவிழா- வீடியோ

2019-07-16 345

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்தள்ளது பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம். 63 நயன்மார்களில் ஒருவரும், பெண்பார் புலவர்களில் ஒருவருமானவரும் சிவபெருமாளால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி காரைக்கால் அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர். அப்போது பக்தர்களுக்கு வழங்கிய அட்சதையை அவரவர் தலையில் தூவிக்கொண்டு காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை தரிசனம் செய்தனர். மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்வு 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி காரைக்கால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பிற்கான புதுச்சேரியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் காரைக்கால் சென்றுள்ளனர். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது.

Karaikal ammaiyar temple mangani festival.

Videos similaires