தஞ்சாவூர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி- வீடியோ

2019-07-12 597

தஞ்சாவூர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது சிறு குடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது. முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் தாய், சேய் நலத்தை பாதுகாத்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் ஆணும். பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல் பெண் சிசு கொலையை தடுத்தல் இளம் வயது திருமணத்தை தடுத்தல் இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல் மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல் வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனனவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என ஆட்சியர் உறுதி மொழி வாசிக்க அவரைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளும் உறுதி மொழி ஏற்றனர்.திலகர் திடலில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று சங்கீத மஹாலில் நிறைவு பெற்றது.

des : Awareness rally and affirmative speech on behalf of people's welfare and family welfare

Free Traffic Exchange

Videos similaires