தஞ்சாவூர் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இலங்கை புத்த இனவெறி ராஜபட்சே அரசானது கொன்று குவித்தது.ஈழத் தமிழர்கள் இறந்த 10ம் / ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இரண்டு நாள் மாநாடாக தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழத்தில் நடந்த துயரங்கள் குறித்து கவியரங்கம், நூல் வெளியீடு, கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநாட்டின் நோக்கமாக ஈழத் தமிழர்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் Uது. அதில் ஐரோப்பிய ஒன்றியங்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கியுள்ள நிலையில் இந்திய அரசும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காத்திட புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பொது வாக்கெடுப்புற நடத்திடவும் போரின் போதும் அதற்கு பின்னரும் காணாமல் போன ஈழத் தமிழர்களை கண்டுபிடிக்க செஞ்சிலுவை சங்க விசாரணையை உடனே துவக்கி டவும்.போருக்கு பின்பும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அவர்களைப் பற்றிய பதிவேடுகள் இலங்கை ராணுவத்தினரிடமும் இல்லை. எனவே அவர்களின் நிலை என்ன என்பதையும் பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் தலையிட்டு உயிருடன் உள்ளவர்களை மீட்டு ஒப்படைக்க வேண்டுமெனவும் இன அழிப்பிற்க்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை அரசு மீது அதிகாரம் கொண்ட அமைப்பான ஐ.நா.அமைப்பு தாமதமின்றி தலையிட்டு துயருற்று வரும் தமிழர்களை காக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்களை ஆதரித்து .வைகோ . பெ.மணியரன்.எஸ்.டி.பி.ஐ. தெகலான் பாகவி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி குடந்தை அரசன் சி.பி.ஐ. பாரதி. சி.பி.ஐ.எம் நீலமேகம் உள்ளிட்ட திரளான அரசியல் கட்சியினர உரையாற்றினார்கள்.