இந்தியா, மதசார்பின்மைக்கு பிற நாடுகளுக்கு எடுத்துகாட்டாக உள்ளது- வீடியோ

2019-07-01 1,660

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறுபான்மை மக்களின் நலன் குறித்தும் அவர்களின் மேம்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவர் ஜார்ஜ் குரியன் கலந்துகொண்டு பேசுகையில் மதாசார்பின்மைக்கு எடுத்து கட்டாக இந்தியா என்றைக்கும் திகழ்ந்து சீனாவில் 10 லட்சம் இஸ்லாமிய மக்களை சிறைப்படுத்தியுள்ளனர் மியான்மர் நாட்டில் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் அமெரிக்காவில் கருப்பின குழந்தைகள் அந்நாட்டு காவல்துறையினரே சுட்டுகொன்றுள்ளனர் ஆனால் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்புடனும் மத நல்லினக்கத்துடனும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் உள்ளனர் அதற்கு காரணம் நம் நாட்டின் நீதித்துறையும் சட்டங்களும் வேற்றுமையில் ஒற்றுமையும் தாம் நாம் இதன் மூலம் பிற நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்வதுடன் மத நல்லினக்கம் மற்றும் மதசார்பின்மையை இந்தியா கற்பிக்கிறது நமது பாரத பிரமரும் மத்திய அரசும் சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது ஆண்டிற்கு 1 கோடி பேருக்கும் மேலாக கல்வி உதவித்தொகையை சிறுபான்மை மக்களுக்கு இந்தியா வழங்குகிறது இதன் மூலம் மற்ற நாடுகளை காட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு அதிக கல்வி உதவித்தொகை வழங்கும் நாடாக நாம் திகழ்கிறோம் மேலும் பல மாவட்டங்களை மத்திய அரசு அதிக சிறுபான்மை மக்கள் வசிக்கும் மாவட்டங்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் அளித்துள்ளது இதனை பயன்படுத்தி சிறுபான்மை மக்கள் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடைந்து பயனடைய வேண்டும் என்று பேசினார் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சிறுபான்மை மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

des : India is an example of secularism to other countries

Videos similaires