Switzerland information that Indians money in banks Rs 6,757 crore.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது. கருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசிய விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களையும் இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் பகிர்ந்து வருகின்றன. வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.
#SwissBank
#BlackMoney