தருமபுரியில் மது மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு கல்லூரி மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினமான இன்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு முக்கிய சாலை வழியாகச் சென்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முடிவடைந்து.
des : Public college and school students rally to raise awareness on the dangers of alcohol and drugs