புதுச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பேரணி- வீடியோ

2019-06-28 333

புதுச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 6பிரச்சார விழிப்புணர்வு வாகனங்களை சட்டசபையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதேபோல் பாகூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தையொட்டி சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கொடியசைத்து தொடக்கி வைத்தார் இதில் 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ரூபாய் 14ஆயிரம் கோடி செலவில் ஜிப்மர் மருத்துவமனையின் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை புதியதாக சேதராப்பட்டு பகுதியில் கட்டுவதற்கு மத்திய அரசு 80ஏக்கர் நிலத்தை மாநில அரசிடம் கேட்டு இருந்த நிலையில் முதல் கட்டமாக 50ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிதார் மேலும் பல்நோக்கு மருத்துவமனை கட்ட ரூபாய்- 518கோடி நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார் இதேபோல் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் 4 புதிய மைதானங்கள் புதியதாக கட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

des : Health Minister Mallady Krishna Rao has said that 50 acres of land has been allotted for the construction of a state-of-the-art multi-purpose hospital at Jipmar Hospital in Chedaratu, Puducherry.

Videos similaires