பெண் ஃபோட்டோகிராபர்களிடம் மணப்பெண்கள் கம்ஃபோர்ட்டபிளாக உணர்வது நிஜமா?! | Sowmya Nizhal

2019-06-28 6

மற்ற துறைகளில் எல்லாம் தங்கள் மகனோ, மகளோ வர வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்... புகைப்படத்துறைக்குள் மட்டும் தங்கள் வாரிசுகள் நுழைய வேண்டாம் என நினைப்பதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்கிறார் புகைப்படக் கலைஞர் செளம்யா. பெற்றோரின் அந்த மனத்தடையை உடைத்து புகைப்படத்துறையில் வெற்றிகரமாகச் சாதிப்பது எப்படி என்றும், புகைப்படத்துறையில் பெண்களுக்கான சுயமரியாதைக்கும், சமூக அங்கீகாரத்திற்கும் கூட எவ்வித பாதகமும் நேராமல் அவர்களால் வெற்றிகரமாக இயங்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து நமது இந்த வார நோ காம்பரமைஸ் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார் புகைப்படக் கலைஞராக சாதித்து வரும் செளம்யா நிழல்.

இது முன்னோட்டம் மட்டுமே...

முழுமையான நேர்காணலை வரும் வெள்ளியன்று தினமணி.காமில் காணத்தவறாதீர்கள்.

விருந்தினர்: செளம்யா நிழல் | Photographer Sowmya Nizhal
சந்திப்பு: பத்திரிகையாளர் கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan

ஒளிப்பதிவு: ராகேஷ்

படத்தொகுப்பு: ஹேம்நாத்

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்

Free Traffic Exchange