புயல் எச்சரிக்கை எண்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? | Cyclone warning signals What they mean?

2019-06-28 1

புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். அவை, புயல் எச்சரிக்கை கூண்டு எண் – 1 மற்றும் 2 – புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும். கூண்டு எண் - 3 துறைமுகங்களில் வழக்கத்தை விட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும். கூண்டு எண் 4 – கடலில் புயல் உருவாகி உள்ளதை குறிக்கும். கூண்டு எண்கள் – 5, 6, 7 – புயல் தீவிரமடைவதை குறிக்கிறது. கூண்டு எண் – 8, 9, 10 தீவிர அபாய எச்சரிக்கை மற்றும் அதி வேகமாக காற்று வீசுவதைக் குறிக்கும்.

வழங்கியவர் - உமா ஷக்தி

ஒலிப்பதிவு - சவுந்தர்யா முரளி

ஒருங்கிணைப்பாளர் - திவ்யா தீனதயாளன்