வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகரில் தமிழ்நாடு அரசின் நியாயவிலைக்கடை உள்ளது இக்கடைக்கு லாரி மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து அரிசி சர்க்கரை கோதுமை உள்ளிட்டவைகள் கொண்டு வந்து இறக்கப்பட்டது இன்று அவ்வாறு இறக்கப்பட்டதில் சுமார் அரை மூட்டை அரிசி ஆங்காங்கே பூமியில் சிதறி கிடந்தது இதனை அப்பகுதியில் உள்ள ஆடுகள் கூட்டமாக வந்து அரிசியை திண்றது ஒவ்வொரு ரேஷன் கடை முன்பு மூட்டைகள் இறக்கும் போது இவ்வாறு அரிசிகள் மூட்டைகளிலிருந்து கொட்டுவதும் அதனை இறக்கிபோட்டுவிட்டு சுமைதூக்கும் தொழிலாளர்கள் செல்வதும் வாடிக்கையாகியுள்ளது இதனால் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் எடை குறைந்த அளவே வழங்கப்படுகிறது ரேஷன் கடைகாரர்களோ இதனை சரி செய்ய பொதுமக்களுக்கும் வழங்கும் அரிசி எடையில் அதனை சரி செய்கின்றனர் இவ்வாறு உணவு பொருள் வீணாகாமல் கடைகளுக்கு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
des : Half packed rice wasted to the ground after the unloading of rice packets in the settlement