Minister M.R. vijayabaskar press meet.
வரும் 4 ம் தேதி இன்னும் 500 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இயக்கி வைக்க உள்ளார் என்றும் 5 ஆயிரம் புதிய பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்குகின்றன என்றும், இன்னும் புதிய பேருந்துகள் வேண்டி கோரிக்கை போக்குவரத்து துறை மானியக்கோரிக்கையில் வைப்போம் என்றும் கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் 5 பள்ளிக்கட்டிட திறப்பு விழா மற்றும் ஐயர்மலை அரசு கலைக்கல்லூரியில் பூமி பூஜை விழாவும் என்று 3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களையும், பூமி பூஜையையும் தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டியளித்தார்.