வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சிப்காடு பேஸ் -3 இல் இயங்கி வரும் எஞ்ஜின் தயாரிக்கும் நூட்டி கார்லோ என்ற நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி.எஞ்சின் தயாரிக்கும் நிறுவனமான நூட்டி கார்லோ என்ற தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதில் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 39க்கும் மேற்பட்டோரை எவ்வித காரணமும் கூறாமல் நிர்வாகத்தின் திடீரென பணிநீக்கம் செய்துள்ளனர்.மேலும் புதிதாக 100 பேரை பணியமர்த்தியுள்ளனர்.ஆகவே தங்களை மீண்டும் பணியமர்த்தி உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊழியர்கள் 39 பேரும் தொழிற்சாலைக்கு எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.
Workers protest for sacking contract workers after working for five years at private engine manufacturing plant in Ranipet
#Ranipet
#Protest