தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டனூர் பேருந்து நிலையத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிழல் கொடையை பொதுமக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக அங்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வைத்து பயன்படுத்துகின்றார். இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிழல் கொடைக்கு அருகில் தனியார் கல்யாண மஹால் உரிமையாளர் திருமணமன மகாலுக்கான வாகனங்கள் நிறுத்துவதற்காக அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டு வாங்கு குறுக்கு வழியில் முயற்சித்து வருகிறார் என்றும் இதனால் பள்ளி குழந்தைகள், கர்பிணி பெண்கள், முதியோர்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கும் ஆட்டோ சங்கத்திற்கும் இடைஞ்சலாக இருக்கிறது அதனால் அரசு இடத்தை பொதுமக்களுக்கு இடையூறாக தனியார் திருமண மஹால் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தி அந்த இடத்தை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் ஆட்டோ சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வாரம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கண்டமனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பயனியாளர்கள் நிழற்குடையை ஆக்கிரமித்து தனியார் மண்டபத்தின் உரிமையாளர் ஆக்கிரமிக்க நினைப்பது பொது மக்களுக்கும், பயணியாளருக்கும், ஆட்டோ சங்கத்தினருக்குக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
des : Attempts to cross state lines and occupy buildingsxx