புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் புரவி எடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவில் ஆவாம்பட்டியில் வைத்து மண்ணினால் புரவிகள், மதலைகள் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட சிலைகளை பக்தர்களால் தோலின் மீது சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே மேள தாளத்துடன் சென்று மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தானியம், ஆவாம்பட்டி உள்ளிட்ட 8 கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.
des : Hosting ceremony held at Ponnamaravathi