திருப்பத்தூர் அடுத்த மீட்டூர் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடிப்பு

2019-06-19 1,678

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லன் வட்டம் அண்ணா நகர் நாச்சியார் குப்பம் மருதாணி குப்பம் போன்ற பகுதிகளில் கடந்த 6 மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் - ஆலங்காயம் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இரண்டு மணி நேரம் கழித்து பேருந்துகள் சென்றனர் பின்னர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகர்குப்தா விரைந்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்களை கலைந்து சென்றனர்.

des : Government bus jailed people protest against lack of proper drinking water supply for the last 6 months

Videos similaires