பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புதுமுக மாணவிகளுக்கான வரவேற்பு விழா- வீடியோ

2019-06-19 30

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புதுமுக மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி முதல்வர் கேத்த லீனா தலைமையில் நடைபெற்றது.கல்லூரியின் விதிமுறைகள், கல்லூரி செயல்பாடுகள் குறித்து முதல்வர் எடுத்துரைத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரவள்ளி பேசுகையில் கல்லூரியில் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் இந்த 3 வருட படிப்பு நமது அடுத்த இலக்கிற்கு அழைத்துச் செல்லும் எனவே வாழ்வை தேர்ந்தெடுக்க வைக்கும் கல்லூரி படிப்பை நமக்காக படிக்காமல் நம்மாலும் 4 பேரை நல்ல முறையில் உருவாக்க முடியும் என்ற நோக்குடன் படிக்க வேண்டும் என்றார். குயின்ஸ் கலை அறிவியல் கல்லூரி செயலர் ராஜேந்திரன் பேசுகையில் மாணவிகளுக்கு அலைபேசி தேவையற்றது எனவே பெற்றோர்கள் அதை ஊக்குவிக்கக் கூடாது என்றார். புதிதாக கல்லூரியில் இணைந்த மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டது.

des : Placement Officer Sundaravalli advised to prepare for competitive exams while studying in college.

Videos similaires