தமிழிசை சவுந்திரராஜன், நாராயணன் திரிபாதி உள்ளிட்ட பாஜக பிரமுகர்களை டுவிட்டரில் டேக் செய்துள்ள பூ உலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அணுக்கழிவை தமிழகத்தில் வைக்க விடமாட்டோம் என்று சொன்னால் நாங்கள் தேசதுரோகிகள், அணுக்கழிவுகளை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன கர்நாடகா பாஜக? யார் கைகூலிகள்? என கேள்வி எழுப்பி உள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணுமின்சாரம் வெற்றிகரமாக உற்பத்தியாகிவரும் நிலையில் அணுகழிவுகளை கொட்டுவது குறித்து இதுவரை மத்தியஅரசு முடிவெடுக்காமல் இருந்து வந்தது. அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே அமைக்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் ஜுலை 10ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளது.
if We do not allow Nuclear waste called us anti national, but kartanka bjp also oppose Nuclear waste, so who anti national? Poovulagin Nanbargal Sundararajan ask bjp leaders
#BJP
#TamilNadu
#Karnataka