வேலூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அருகே சந்தை கோட்டையூர் அப்பாச்சி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அவின்குமார்(35).இவர் கோடியூரில் நகை அடகு கடை வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தனது தாயை அழைத்துக் கொண்டு சென்றார்.அப்போது பழைய வாரச் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்த மற்றொரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் அவின்குமாரின் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த 12 .5 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கொண்ட பையை பறித்து கொள்ளையடித்துகொண்டு கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் பின்னர் இது குறித்து அவின்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் அடகு கடை வியாபாரியிடம் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது மக்கள் அடகு வைத்து நகை என்பதும் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4.50 லட்சமாகும்.
des : 12.5 Sovereign gold jewelery Rs 2 lakh 25 thousand cash bicycle mob robot