அரக்கோணத்தில் அதிமுக ,பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை- வீடியோ

2019-06-07 547

வேலூர்மாவட்டம்,அரக்கோணத்தில் உள்ள நகர அரங்கில் அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில் அதிமுக,பாமக,தேமுதிக,பாஜக ஆகிய கூட்டணி கட்சிகள் வரவுள்ள உள்ளாட்சித்தேர்தலை சந்திப்பது குறித்தும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்காக பணியாற்றி கூட்டணி கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கூட்டணிக்காக பாடுபட்டு வாக்குகளை பெற்று தந்த அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் வரவுள்ள உள்ளாட்சித்தேர்தலை எதிர் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது இதில் பாமக மாநில துணை பொது செயலாளர் சரவணன் ,பாமக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தேர்தலில் பாடுபட்ட அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துகொண்டார் இதில் பாமக மாநிலதுணை பொதுசெயலாளர் சரவணன் பேசுகையில் அரக்கோணம் தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து பாடுபட்டோம் உள்ளாட்சிதேர்தலிலும் அயராது உழைக்க வேண்டும் சோளிங்கர் தொகுதியில் அதிமுக பாமக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சம்பத் அமோக வெற்றி பெற்றது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பேசினார்.

des : In the Arunachal Pradesh, AIADMK and Mamata, including the PMK, advise on the local elections

Videos similaires