திருகாமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ விழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி- வீடியோ

2019-06-07 1

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருகாமீசுவரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தினுள் கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

des : The flag of the festivities held at the festival of Sri Krishna

Videos similaires