வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் எஸ் ஐ ஸ்ரீரங்க நாதன் தலைமையில் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் மார்க்கத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் அமரும் நாற்காலியில் கீழே கேட்பாரற்று இருந்த இரண்டு பைகளை சோதனை செய்ததில் அதனுள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார் 25 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர் இதன் மொத்த மதிப்பு சுமார் 12, 50,000 ரூபாய் என்று கூறினர். தமிழ்நாடு போதை நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் காட்பாடி ரயில்வே போலீஸார் உடன் சேர்ந்து கஞ்சா கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்நிலையத்தில் 25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
DES : Rs.12 / - in Katpadi railway station The police arrested 25 kg of cannabis worth Rs 50 lakh