தவறவிட்ட ரூ.42 ஆயிரம் பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன டிரைவர்- வீடியோ

2019-05-28 1,246


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த சங்கரவேல் என்பவரது மகன் சண்முகம் இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ. 42 ஆயிரம் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பணம் வைத்திருந்த பை தவறிவிட்டது.இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர் சண்முகம் சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தவறவிட்ட பணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இலவன்குளம் சாலை வழியாக சங்கரன்கோவிலில் உள்ள சண்முகா டிரேடர்ஸ் நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வரும் மீன்துள்ளி கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயன் என்பவர் அந்த பணத்தை எடுத்துள்ளார். எடுத்த பணத்தை கடையின் உரிமையாளர் வேலுச்சாமியிடம் வழங்க அவர் பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று நினைத்து சங்கரன்கோவில் டவுண் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் ரூ. 42 ஆயிரத்தை ஒப்படைத்தார். உடனடியாக விசைத்தறி உரிமையாளர் சண்முகத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து டிரைவர் கண்டெடுத்த ரூ. 42 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.நேர்மை தவறாமல் மனிநேயத்துடன் தான் சாலையில் கண்டெடுத்த ரூ. 42 ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர் மார்க்கண்டேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

des : In Sankarankoil, the luxury owner loses Rs 42 thousand cash from a private company which has been handed over to a private company.

Videos similaires